Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அவதார் இன்னும் எத்தனை பாகங்கள் வரப்போகுது தெரியுமா? “… சர்ப்ரைஸ் தகவல்

HOLLYWOOD

“அவதார் இன்னும் எத்தனை பாகங்கள் வரப்போகுது தெரியுமா? “… சர்ப்ரைஸ் தகவல்

அவதார் 2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் நிலையில் அவதார் திரைப்படத்தில் இனி வரப்போகும் பாகங்கள் குறித்தான தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவதார்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 280 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு “அவதார் 2; தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆதலால் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியான “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படத்தோடு வெளியாகிறது என தகவல்கள் வந்தன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தியாக இத்திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே இணையத்தில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இனி வரப்போகும் பாகங்கள் குறித்தான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது அவதார் 2 ஆம் பாகமான “தி வே ஆஃப் வாட்டர்”-ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு “அவதார்: தி சீட் பியரர்” (The Seed Bearer), வெளியாகிறது. அதே போல் 2026 ஆம் ஆண்டு “அவதார்: தி டல்கன் ரைடர் (The Tulkun Rider) வெளியாகவுள்ளது.

மேலும் 2028 ஆம் ஆண்டு “அவதார்:தி குவிஸ்ட் ஆஃப் எய்வா” (The Quest of Eywa) வெளியாகிறது. இவ்வாறு 2028 வரை அவதார் பாகங்கள் வெளிவருவதற்கான திட்டங்களை வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top