Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அவதார் 2” இத்தனை மொழிகளிலா வெளிவருகிறது? ஷாக்கிங் தகவல்

HOLLYWOOD

“அவதார் 2” இத்தனை மொழிகளிலா வெளிவருகிறது? ஷாக்கிங் தகவல்

அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படம் எத்தனை மொழிகளில் வெளிவரப்போகிறது தெரியுமா?

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவதார்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 280 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு “அவதார் 2; தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆதலால் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

சில நாட்களுக்கு முன் இத்திரைப்படத்தின் டிரைலர் மே 6 ஆம் தேதி வெளியாகவிருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படத்தோடு வெளியாகும் என தகவல்கள் வந்தன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தியாக இத்திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் ஹாலிவுட்டில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” பிரீமியரில் “அவதார் 2”  திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.

சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சினிமாக்கான் 2022 விழாவில் “அவதார் 2” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “அவதார் 2” திரைப்படம் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக திரைப்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் “அவதார்” 2 திரைப்படம் 160 மொழிகளில் வெளிவரப்போகிறது என்ற செய்தி பலரையும் “ஓ” போட வைத்திருக்கிறது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in HOLLYWOOD

To Top