GOSSIPS
“ஆடியோ லாஞ்ச்” நடிகர் படத்தை ஓடவிடாத “பைலட்” நடிகர்…??
“ஆடியோ லாஞ்ச்” நடிகர் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படத்தை “பைலட்” நடிகர் தான் ஓடவிடவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு “பைலட்” நடிகர் நடித்த திரைப்படம் வெளிவந்தது. அவரின் ரசிகர்களுக்கு அப்படம் பிடித்திருந்தாலும் பொது ரசிகர்களால் பங்கமாய் கலாய்க்கப்பட்டது. அதுவும் அப்படத்தில் வந்த சென்டிமெண்ட் சீன்கள் பங்கமாய் கலாய்க்கப்பட்டன.
இதனை தொடர்ந்து “ஆடியோ லாஞ்ச்” நடிகர் நடித்த திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. அத்திரைப்படமும் “குளோஸ்” ஆனது. தியேட்டரை விட்டு வெளிவந்த ரசிகர்களின் முகங்கள் செத்து போய் கிடந்தன. “இன்னும் எத்தன காலம் தான் இப்படியே…” என மனதுக்குள் வெந்து நூடுல்ஸ் ஆனார்கள்.
ஆனால், “ஆடியோ லாஞ்ச்” நடிகரின் படத்தை நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து “பைலட்” நடிகர் தான் ஓடவிடாமல் தடுத்தாராம். அதாவது நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு லட்சக்கணக்கான பணம் இறக்கப்பட்டதாம்.
ஆனால் மற்றொரு புறம், இது “பைலட்” நடிகர் செய்யவில்லை, அவரின் மேனேஜரின் கைவசம் தான் இது என கூறுகிறார்களாம். ஆனால் “மேனேஜருக்கு அவ்வளவு காசெல்லாம் எப்படி வந்துருக்கும், எல்லாம் நம்ம “பைலட்” தான் “என் படம் ஓடலைல, அவர் படமும் ஓடக்கூடாது ன்னு மேனேஜர் மூலமா தன்னோட ஆசைய சாதிச்சிக்கிட்டார்” என்று இன்னொரு புறம் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.
மேனேஜரே செய்திருந்தால் ஏன் அவர் தடுக்கவில்லை? என்ற கேள்விக்கு “பைலட்” நடிகருக்கே இந்த விஷயம் தெரியாது என சமாளிக்கிறார்களாம். ஆனால் “ஆடியோ லாஞ்ச்” நடிகரின் படத்தை ஓடவிடாமல் தடுக்க நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு “பைலட்” நடிகரின் பக்கமிருந்து தான் பணக்கட்டுகள் இறக்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் ஊர்ஜிதப்படுத்தி சொல்கிறார்களாம். அதே போல் “இருவரின்” ரசிகர்கள் சண்டைக்கும் “பைலட்” தரப்பே காரணம் என்றும் சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகின்றனவாம்.