CINEMA
“அசுரன்” பட கதாநாயகியின் உயிருக்கு ஆபத்து? பிரபல இயக்குனர் பரபரப்பு..
அசுரன் திரைப்படத்தில் நடித்த கதாநாயகியின் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலையாள சினிமா உலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல நடிகரான திலிப் குமாரை 1998 ஆம் ஆண்டு கரம் பிடித்த இவர், 2015 ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இவர் 2019 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது அசுர நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களை அசரவைத்தார்.
இந்நிலையில் “நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என பிரபல மலையாள இயக்குனர் சனல் குமார் சசிதரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இச்செய்தி சினிமாத் துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அப்பதிவில் சனல்குமார்..
“நான் சமூக வலைத்தளத்தில் நான்கு நாட்களாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் வேறு ஒருவரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் பதிவிட்டு வருகிறேன். மஞ்சு வாரியரின் மேனேஜர்களான பினிஸ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பெயர்களை சமூக வலைத்தளத்தில் நான் குறிப்பிட்டு மஞ்சு வாரியர் குறித்து எழுதியும் எவரும் கண்டு கொள்ளவில்லை. இந்த அமைதி பெரிதும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது. இவ்விஷயத்தை குறித்து நான் “Women in Cinema collective” என்ற அமைப்புக்கு மின்னஞ்சல் செய்தேன். எனினும் அவர்களிடம் இருந்தும் கூட மறுமொழி வரவில்லை. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் நகைச்சுவையாக பார்க்கிறார்கள். வெகுஜன ஊடகங்கள் மஞ்சு வாரியர் விஷயத்தில் அலட்சிய போக்கு காட்டுகிறது. இதனை குறித்த உண்மையை தேசிய ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்”
எனவும் பதிவிட்டுள்ளார். இயக்குனர் சனல் குமார் சசிதரனின் இப்பதிவு இந்திய சினிமா திரைவுலகிடையேயும் மஞ்சு வாரியரின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.