CINEMA
“மாயவா தூயவா”…. ஷ்ரேயா கோஷலின் இனிய குரலில், ரஹ்மானின் மெல்லிசை…
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் “இரவின் நிழல்” திரைப்படத்தின் “மாயவா தூயவா” பாடல் இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கோலிவுட்டின் தனித்துவமான நடிகர். இவரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் சேர்ந்தால் போதும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். இவர் நடிகர் மட்டுமல்லாது பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் இயற்றிய “புதிய பாதை” “ஹவுஸ் ஃபுல்” ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை பெற்றது. எப்போதுமே புதுமையாகவும் தனித்துவமாகவும் சிந்திக்ககூடிய இவர் சமீபத்தில் எந்த துணை நடிகரும் அல்லாமல் தான் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” என்ற திரைப்படமும் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படத்தையும் இவரே இயக்கினார்.
இதனை தொடர்ந்து “இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது.
இத்திரைப்படத்தின் “Single” மற்றும் படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார். விழாவில் ஏ.ஆர்.ரகுமானை பேட்டிக்கண்ட போது பார்த்திபன் பேசிக்கொண்டிருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என தெரிய வந்தவுடன் ஆத்திரத்துடன் மைக்கை வீசி எறிந்த செய்தி நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில் ஏ. ஆர். ரகுமான் மெல்லிசையில் ஷ்ரேயா கோஷலின் இனிமையான குரலில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இப்பாடலை எழுதியவர் மதன் கார்க்கி. ஏ. ஆர். ரகுமான்- ஷ்ரேயா கோஷல் கூட்டணியில் பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அதே போல் இப்பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது.