CINEMA
“படம் சூப்பர்.. வேற லெவல்”…. பா ரஞ்சித்தை கட்டிபிடித்து பாராட்டிய பாலிவுட் இயக்குனர்
“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் பா ரஞ்சித்தை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.
பா ரஞ்சித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் வகையில் தான் அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பா ரஞ்சித் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் “அட்டக்கத்தி” திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு கலர்ஃபுல் காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
காதலுக்கு மதம் இல்லை, ஜாதி இல்லை, பாலினம் இல்லை என்ற நவீன கருத்தாக்கத்தை மையமாக கொண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். இதில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துசாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ராபர்ட் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
எப்போதும் பா ரஞ்சித் திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். ஆனால் இத்திரைப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கலர்ஃபுல் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் காதலின் பல பரிணாமங்களை பா ரஞ்சித் காட்டியுள்ளதாக தெரியவருகிறது “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் ஆகஸ்து 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை சிறப்பு திரையிடலாக பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், பா ரஞ்சித்தை கட்டி அணைந்து புகழ்ந்து தள்ளினார். தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Dir @anuragkashyap72 hugged #PaRanjith & praised him after watching #NatchathiramNagargiradhu in Mumbai @beemji pic.twitter.com/2ZrYouCzbE
— Rajasekar (@sekartweets) August 29, 2022
அனுராக் காஷ்யப் “கேங்கஸ் ஆஃப் வாசிப்பூர்”, “அக்லி”, “பிளாக் ஃப்ரைடே”, “மன்மார்ஷியான்” போன்ற பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர். தமிழில் நயன்தாரா நடித்த “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.