TELEVISION
“எங்களோட கனவு வீடு”.. அனிதா சம்பத் உருக்கம்
அனிதா சம்பத் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளதாக உருக்கமான ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அனிதா சம்பத் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே மக்களிடம் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-ல் கன்டெஸ்டன்டாக உள்ளே நுழைந்தார்.
பிக்பாஸ் வீட்டிக்குள் தான் தனிமையாக இருப்பதாகவும் தனக்கு யாரும் இங்கே நண்பர்கள் இல்லை எனவும் புலம்பிக் கொண்டே இருப்பார். எப்போதும் அவரது கணவரையே நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் வீட்டினுள் யாரிடமும் கூட்டு சேராமால் தனித்து விளையாடியதாக பலரும் பாராட்டினர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி வாரம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்துவிட்டார்.
அதனை தொடர்ந்து “பிக் பாஸ் ஜோடிகள்” சீசன் 1-ல் ஷாரிக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிய அவர் இறுதி சுற்று வரை சென்று டைட்டிலையும் கைப்பற்றினார். அதன் பின்பு “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். ஆனால் அதிலும் பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில் அனிதா சம்பத் புதிதாக வீடு வாங்கியுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் புதிய வீடு வாங்குவது என்பது தனக்கும் தனது கணவர் பிரபாவுக்கும் இருந்த மிகப்பெரும் கனவு என்றும், பல நாட்கள் வாடகை வீட்டிலேயே இருந்த அவர்கள் இப்போது தங்கள் கனவை நிறைவேற்றிவிட்டதாக பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அனிதா சம்பத்தும் அவரது கணவர் பிரபாவும் கழுத்தில் மாலை அணிந்திருக்கின்றனர். மேலும் அப்புகைப்படத்தில் அன்னையர் தினத்தில் தங்களது இரண்டு அன்னையர்களுக்கும் வீடு வாங்கி உள்ளதாக கூறியுள்ளார். அப்புகைப்படத்தின் கமெண்ட் பகுதியில் அனிதா சம்பத்-பிரபா தம்பதியர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram