CINEMA
“ஷாருக் கான் திரைப்படத்திற்கு அனிருத் மியூசிக்கா?”.. சும்மா பட்டைய கிளப்ப போகுது..
அட்லி-ஷாருக்கான் இணையும் புதிய திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் ஹிட் இயக்குனரான அட்லி, “பிகில்” திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே ஷாருக் கானிடம் கதை சொன்னதாக தகவலும் வந்தது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஷாருக் கான் அட்லிக்கு ஓகே சொன்ன செய்தியும் வெளிவந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு “ஜவான்” என பெயர் வைத்திருந்தனர். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று நேற்று வெளியானது.
அதில் ஷாருக் கான் முகத்தில் படுகாயங்களுடன் தென்படுகிறார். பல துப்பாக்கிகளில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டும், ஒரு கத்தியை எடுத்துக் கொண்டும் போருக்கு போவது போல் ரெடி ஆகிறார். அதன் பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஷாருக் கான் அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஒரு டிரைன் செல்கிறது. இவ்வாறு அந்த வீடியோ நிறைவடைகிறது.
“ஜவான்” திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு யார் இசையமைக்க உள்ளார் என்பது குறித்தான கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து உற்சாகமாக அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “எனது கனவு நினைவாகி உள்ளது. பாட்ஷா SRK திரைப்படத்தில் பணியாற்ற உள்ளேன். சகோதரர் அட்லிக்கு நன்றி. இதை நாங்கள் பெருமையாக உணர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அனிருத் இதற்கு முன் “டேவிட்”, ஷாகித் கபூர் நடித்த “ஜெர்சி” ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஷாருக் கான்-அட்லி இணையும் “ஜவான்” திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Dreams do come true! Scoring music for the Badshah himself @iamsrk 🥳🥳🥳 Thank you and so proud of my brother @Atlee_dir and this is going to be too special for us ❤️❤️❤️ Here is #Jawan teaser – https://t.co/0DWWxA5zKr
Please bless us all 😊😊😊@RedChilliesEnt— Anirudh Ravichander (@anirudhofficial) June 3, 2022