CINEMA
பிரபல தொலைக்காட்சி நிறுவனர் மகளுடன் அனிருத்திற்கு திருமணம்??
இசையமைப்பாளர் அனிருத் பிரபல தொலைக்காட்சி நிறுவனரின் மகளை திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது?
இசையமைப்பாளர் அனிருத் சிறு வயதிலேயே இசையமைப்பாளராக பிரபலமானவர். அவரின் முதல் திரைப்படமான “3” திரைப்ப்படத்திலேயே “why this kolaveri” பாடலின் மூலம் உலகம் முழுவதையும் கவனிக்க வைத்தவர்.
இவர் முதலில் நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். காலப் போக்கில் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இது குறித்து அப்போது ஒரு பேட்டியில் பேசிய அனிருத் “ஆண்ட்ரியா என்னை விட ஐந்து வயது மூத்தவர்” என கூறினார். “வயது தான் உங்களது பிரிவுக்கு காரணமா?” என நிருபர் கேட்ட போது “இருக்கலாம்” என பதில் சொன்னார் அனிருத்.
இதனை தொடர்ந்து அனிருத்தும் நடிகை கீர்த்தி சுரேஷும் காதலித்த வந்ததாக கிசு கிசுக்கள் எழுந்தன. ஆனால் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் அனிருத்திற்கு தற்போது திருமண வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் யாரை திருமணம் செய்யப் போகிறார்? என இணையத்தில் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
சிலர் அனிருத் பிரபல சன் தொலைக்காட்சி அதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்யப் போவதாக கூறுகின்றனர். கோலிவுட் வட்டாரத்தில் “இது உண்மை” தான் என பலரும் கூறி வருகின்றனர்.
கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஐபிஎல் போட்டிகளில் சன் ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக மைதானங்களில் அடிக்கடி தென்பட்டு வைரல் ஆகியவர் என்பது நமக்கு தெரியும். அவரை தான் அனிருத் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த உண்மை விவரம் இன்றும் தெரியவில்லை.