TELEVISION
“பாக்யாவிடம் வசமாக சிக்கிய கோபி”.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது…
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல பாக்கியலட்சுமியிடம் வசமாக சிக்கி உள்ளார் கோபி. இனிமே ஒன்னும் பண்ண முடியாது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஆம்! சில நாட்களுக்கு முன் தன்னுடைய கணவர் கோபி எந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்? என்று பாக்கியாவிற்கு தெரியாமல் இருந்த நிலையில், விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபியை ராதிகா நலம் விசாரிக்க வந்ததை பாக்கியா பார்த்துவிட்டதில் இருந்து ராதிகா தான் கோபியின் காதலி என தெரிய வந்துவிட்டது.
மேலும் மருத்துவமனையில் ராதிகாவை தன் மனைவி என சொன்னது பாக்கியாவிற்கு இடி மேல் இடி விழுந்தது போல் இருந்தது. அதன் பின் அரண்டு போனது போல் வீட்டிற்கு மழையிலேயே நடந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய புரோமோ வெளிவந்துள்ளது. அதாவது கோபி உடல் நலம் தேறி வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியை தடுத்து நிறுத்திய பாக்கியா, மருத்துவமனையில் கோபிக்கு அவரின் மனைவி தான் பில் கட்டினார் என கூறுகிறார்கள், ஆனால் தான் பில் கட்டவில்லை என குடும்பத்தாரிடம் கூறுகிறார்.
இதனை கேட்ட குடும்பத்தார் அதிர்ச்சி அடைகிறார்கள். அதன் பின் கோபியின் தாயார் “வேறு யார் மனைவி என்று கூறி பில் கட்டியிருக்க முடியும்?” என கேட்கிறார். அதற்கு பாக்கியலட்சுமி கோபியை பார்த்து கோபமாக “நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லவா?” என கேட்கிறார்.
அதன் பின் குடும்பத்தார் அனைவரின் முன்னிலையிலும் ராதிகா தான் பில் கட்டினார் என கூறுகிறார். இதனை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இதுவரை யாருக்கும் தெரியாத ராதிகா-கோபி ஆகியோரின் உறவு தற்போது அம்பலமாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இத்தருணத்தை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இத்தருணமும் வந்து விட்டது. இனி கோபி எப்படி சமாளிப்பார்? அவர் பாக்கியாவை ஏற்றுக் கொள்வாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
