TELEVISION
Chef தாமுவை ஏலக்காய் எடுத்து வர ஆர்டர் போட்ட உறவினர்; பதறிப் போன அம்மு அபிராமி
Chef தாமுவை ஏலக்காய் எடுத்து வர சொல்லிய உறவினரை பார்த்து அம்மு அபிராமி பதறிய கலகலப்பான சம்பவத்தை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் Friends and Family வாரம் என்பதால். குக்குகள் பலரும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டனர். மிகவும் கலகலப்பான சென்ற இந்த எபிசோட் வேற லெவல் Fun ஆக இருந்தது.
குரேஷி மீண்டும் ஸ்ருத்திகா கெட் அப்பில் வந்து அசத்தினார். ஸ்ருத்திகா அழைத்து வந்திருந்த அவரின் கணவர் அர்ஜூனோடு ஸ்ருத்திகா கெட் அப்பில் இருந்த குரேஷி கொஞ்சி கொஞ்சி பேசியது ஸ்ருத்திகாவை காண்டு ஏத்தியது.
அதே போல் பாலா வித்யூலேகாவின் கணவரை போட்டு பாடாய் படுத்தி எடுத்து விட்டார். வித்யூலேகாவின் கணவர் நன்றாக வெண்ணெய் நிறத்தில் இருந்ததால் பாலா அவரை கொஞ்சிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் அம்மு அபிராமி டேபிளில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. அதாவது ஸ்ருத்திகா கெட் அப்பில் வந்த குரேஷி அம்மு அபிராமிக்கு கோமாளியாக வந்தார். ஒரு சுற்றில் கோமாளிகள் காதுகளில் பாடல்கள் ஒலிக்க ஹெட் ஃபோன் மாட்டப்பட்டிருந்தது. குக்குகள் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டியிருந்தனர். குக்குகள் அழைத்து வந்த உறவினர்களும் நண்பர்களும் கண்களை ஒரு துணியால் மூடிக் கொண்டனர்.
இந்த நிலைமையிலேயே இவர்கள் சமைக்க வேண்டும். இது தான் டாஸ்க். அப்போது அம்மு அபிராமியின் தோழி கண்களை துணியால் கட்டியவாறு ஏலக்காய் பொடி எடுத்து வரச் சொல்ல குரேஷியை தேடிக் கொண்டே இருந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த செஃப் தாமுவை குரேஷி என நினைத்து ஏலக்காய் பொடி எடுத்து வரச் சொன்னார். இந்த சம்பவத்தை பார்த்த அம்மு, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சைகை காட்டினார். இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.