GALLERY
நம்ம “அம்மு” எப்பவுமே க்யூட்டு தான்..
நடிகை அம்மு அபிராமி தனது கலக்கல் க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“பைரவா” திரைப்படம் மூலம் அறிமுகமாகிய அம்மு அபிராமி “ராட்சசன்” திரைப்படம் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அம்மு அபிராமியின் சிரிப்புக்கு இந்த தமிழக இளைஞர்களே அடிமை. அவர் க்யூட்டாக கொஞ்சி கொஞ்சி பேசுகையில் இறுகிய மனம் கூட கரைந்து போகும். அவ்வளவு அழகான முக பாவனைகளோடு பேசுவார்.
“அசுரன்” திரைப்படத்தில் தனுஷை “மாமா மாமா” என்று செல்லமாய் கூப்பிடும் போது அவரது கண்கள் காந்த பார்வையாக இழுக்கும். “ராட்சசன்” திரைப்படத்தை தொடர்ந்து “தீரன் அதிகாரம் ஒன்று”, “தானா சேர்ந்த கூட்டம்”, “துப்பாக்கி முனை”, “தம்பி”, “நவரசா” போன்ற படைப்புகளிலும் நடித்துள்ளார்.
அம்மு அபிராமி “ராட்சசன்”திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான “ராக்ஷசுடு” திரைப்படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அதே போல் “அசுரன்” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான “நாரப்பா” திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து “யானை” “கண்ணகி” “நிறங்கள் மூன்று” “கனவு மெய்ப்பட” “யார் இவர்கள்” என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 3-ல் கன்டெஸ்டன்டாகவும் ஜொலித்து வருகிறார். அதிர்ச்சி அருணும் அம்மு அபிராமியும் Pair சேர்ந்தால் மிகவும் கலக்கலாக இருக்கும். இவ்வாறு பல தளங்களில் பிசியாக இருக்கும் அம்மு அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது க்யூட்டாக பல புகைப்படங்களை இறக்கி இளசுகளின் மனசை திக்கமுக்காட வைத்து வருகிறார்.
ஒவ்வொரு புகைப்படமும் நச்சென்று கண்களை கவர்வது போல் உள்ளது. அம்மு அபிராமிக்கு ராட்சசன் திரைப்படத்தில் இருந்தே ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதுவும் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பிறகு அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை வலை போட்டு இழுத்து வருகிறார்.
