TELEVISION
திடீரென கேமரா முன் புரோபோஸ் செய்த அமீர்… பதற்றத்தில் பாவனி..
அமீர் திடீரென கேமரா முன் புரோபோஸ் செய்ததால் பாவனி பதற்றத்தில் ஸ்தம்பித்து போனார்.
அமீர்-பாவனி ஆகியோர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் போல் அலைந்து கொண்டிருந்தனர். அமீர் பாவனியை காதலித்து வருவதாக கூறி வந்தாலும் பாவனி அதனை மறுத்து வந்தார்.
இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக நடனமாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு அமீரின் காதல் குறித்து பாவனியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பாவனி “அமீர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்” என கூறினார். இருவரும் பல மாதங்கள் டேட்டிங்கில் இருக்கின்றனர். இருவரும் பல இடங்களுக்குச் சென்று ஜோடியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் பலரையும் இந்த ஜோடி கவர்ந்துவிட்டது. பார்வையாளர்கள் “அமீரும் பாவனியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என தங்களது கருத்துக்களை அவ்வப்போது கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது புதிய புரோமோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அமீர்-பாவனிக்கு வித்தியாசமான முறையில் பல முயற்சிகள் செய்து புரோபோஸ் செய்கிறார். கையில் மோதிரத்துடன் “என்னை ஏற்றுக்கொள்” என அமீர் பாவனியிடம் கேட்கிறார்.
இதை எல்லாம் பார்த்து ஸ்தம்பித்து நிற்கிறார் பாவனி. அமீரின் செயலைப் பார்த்து அங்குள்ளவர்கள் பலரும் வியந்து போயினர். பாவனி அமீரின் மோதிரத்தை வாங்குவாரா? அமீரை தனது துணையாக ஏற்றுக் கொள்வாரா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் பலரும் “அமீர்-பாவனி கியூட் ஜோடி, இருவரும் சேர வேண்டும்” என வாழ்த்தி வருகின்றனர்.
