TELEVISION
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜொலித்த பாவனி; கண் இமைக்காமல் ரசித்த அமீர்..
பிக் பாஸ் பாவனி மற்றும் அமீர் ஆகிய இருவரும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் காதல் ஜோடிகள் போல் ஜொலிக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனி, வொய்ல்ட் கார்டில் வீட்டிற்குள் வந்த அமீருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் வீட்டிற்குள் காதல் புறாக்களை போல் அலைந்து கொண்டிருந்தனர். அமீர் பல முறை பாவனிக்கு புரோபோஸ் செய்தும் வந்தார். ஆனால் அமீர் தனக்கு நல்ல நண்பன் எனவும் அமீரை தான் காதலிக்கவில்லை எனவும் நிகழ்ச்சியினிடயே பல முறை பாவனி கூறிவந்தார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் அனைவரும் தூங்கிய பிறகு பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாவனி மற்றும் அமீர் இருவருமே சிறப்பாக விளையாடி டாப் 5 வரை சென்றனர்.
இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சி சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. இதில் அமீர்-பாவனி ஜோடி வெறித்தனமாக நடனமாடி வருகின்றனர். அமீர் ஏற்கனவே டான்ஸ் மாஸ்டர் என்பதால் சூறாவளி போல் நடனமாடுகிறார்.
அமீர் பாவனியை காதலித்து வருவதாக கூறினாலும் பாவனியிடம் இருந்து அது குறித்து எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே பாவனி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் “அமீர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு டைம் வேண்டும்” என கூறினார். இதனை கொண்டு பாவனிக்கும் அமீர் மேல் ஒரு கண் இருக்கிறது என தெரிய வந்தது.
இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் இருவரும் சேர்ந்து ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். அதில் Candle Light Dinner-ல் அமர்ந்து இருவரும் Cute ஆக உணவருந்தியுள்ளனர். அதில் பாவனி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஜொலி ஜொலி என ஜொலிக்கிறார்.