TELEVISION
அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பாவனி.. கியூட் புகைப்படம்…
அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் பாவனி. என்ன விஷயம் தெரியுமா?
அமீர்-பாவனி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் புறாக்களை போல் ஜோடியாக திரிந்தவர்கள். அமீர் வெளிப்படையாகவே பாவனியை காதலிப்பதாக கூறி வருகிறார். ஆனால் பாவனி இன்னும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.
இருவரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி வருகிறார்கள். அவர்களின் நடனம் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாகவும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் பாவனி “எனக்கு அமீர் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என கூறினார். இதில் இருந்து பாவனிக்கும் அமீரை பிடிக்கும் என தெரிய வந்தது.
இருவரும் சேர்ந்து தற்போது பல இடங்களுக்கு டேட்டிங் செல்கிறார்கள். அப்புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அமீருக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாவனி. அப்புகைப்படத்தில் பாவனி அமீரை காதலுடன் கட்டிப்பிடித்தவாறு இருக்கிறார்.
இப்புகைப்படத்தை பகிர்ந்த பாவனி அதில்…
“மற்றவர்களின் சந்தோஷத்தையே எப்போதும் விரும்புகிற உன்னை போன்ற ஒருவன் என் வாழ்வில் கிடைத்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நீ என்னிடம் அளவற்ற அன்பையும் அக்கறையையும் செலுத்தி உள்ளாய். இந்த பூமியில் உன்னை மகிழ்வாக வைத்திருக்க அனைத்தும் உன்னிடம் வந்து சேரும் என நம்புகிறேன்.
எனது நல்லது கெட்டது என என் வாழ்வின் அனைத்து தருணத்திலும் இருந்ததற்காக நன்றி. நான் சொன்ன இந்த வார்த்தைகள் எல்லாம் கம்மி தான். இன்னும் அதிகமாக சொல்ல ஆசைப்படுகிறேன், ஆனால் என்னால் முடியாது. லவ் யூ. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
