TELEVISION
ஜோடியாக இணைந்த அமீர்-பாவனி…பாக்கவே கண்கவர் காட்சியா இருக்கே..
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் காதல் புறாக்களாக வலம் வந்த அமீர்-பாவனி தற்போது ஜோடியாக இணையவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 –ல் பங்கேற்பாளராக கலந்து கொண்டவர் நடிகை பாவனி. இவர் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன தம்பி தொடரிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனி, வொய்ல்ட் கார்டில் வீட்டிற்குள் வந்த அமீருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் வீட்டிற்குள் காதல் புறாக்களை போல் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அமீர் தனக்கு நல்ல நண்பன் எனவும் அமீரை தான் காதலிக்கவில்லை எனவும் நிகழ்ச்சியினிடயே பல முறை பாவனி கூறிவந்தார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் அனைவரும் தூங்கிய பிறகு பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாவனி மற்றும் அமீர் இருவருமே சிறப்பாக விளையாடி டாப் 5 வரை சென்றனர். எனினும் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சி சீசன் 2 ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் பாவனி-அமீர் நடன ஜோடியாக களம் இறங்கியுள்ளனர். இருவரும் கலக்கலாக உடையணிந்து இளம் காதல் ஜோடிகளை போலவே ப்ரோமோவில் காட்சி தருகின்றனர். இதனால் பாவனி ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிகழ்ச்சி மே 8 ஆம் தேதியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமீர்-பாவனி ஜோடியை தொடர்ந்து கணேஷ்-ஹராத்தி, ராஜூ-பிரியங்கா, இசைவாணி-வேல்முருகன், ஐக்கி பெரி-தேவ், அபிஷேக்-சுருதி, சுஜா-சிவக்குமார், தாமரை-பார்த்தசாரதி, டேன்னி ஆகியோர் ஜோடிகளாக இணைகிறார்கள். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1-ல் ஷாரிக்-அனிதா சம்பத் ஜோடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
