TELEVISION
மாறி மாறி உண்மையை உளறிக்கொட்டிய அமீர்-பாவனி ஜோடி… செம மேட்டரா இருக்கே!!
மாறி மாறி உண்மையை உளறி கொட்டிய அமீர்-பாவனி ஜோடி. எல்லா விஷயமும் வெளிய வந்துருச்சே.
“பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் நுழைந்த அமீர் இன்ட்ரோ ஆகும்போதே ஒரு நடனப் புயலாகத் தான் இன்ட்ரோ ஆனார். அதன் பின் கடைசி சுற்றுவரை வந்து, டாப் 5 கன்டெஸ்டன்ட்டாக திகழ்ந்தார்.
“பிக் பாஸ்” வீட்டுக்குள்ளே பாவனியுடன் நெருங்கி பழகி வந்தார் அமீர். பாவனிக்கு புரோபோஸும் செய்தார் அமீர். ஆனால் பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமீருடன் நெருங்கிப் பழகுவதை பாவனி நிறுத்தவில்லை.
ஒரு முறை பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த சம்பவம் கூட நடந்தது. இதனை தொடர்ந்து அமீர்-பாவனி ஜோடி தற்போது “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி கலக்கி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் வேடமிட்டு வந்தனர். அதில் அமீர் கிளாமர் உடையில் “தீப்பிடிக்க” பாடலுக்கு நடனமாடினார். அவருக்கு ஜோடியான பாவனி போக்கிரி விஜய் தோற்றத்தில் வந்தார்.
அமீர் கிளாமராக வந்து அதற்கேற்றார் போல் நடனமாடினார். இது பார்வையாளர்களையும் நடுவர்களையும் “ஓ” போட வைத்தது. நடுவர்கள் அமீரை சிறப்பாக நடனமாடினார் என பாராட்டினர்.
இதனை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் Wedding round நடைபெற்றது. இதில் அமீர்-பாவனி ஜோடி பொண்ணு மாப்பிள்ளை போல் வந்து நடனமாடினர். அப்போது பாவனியை பார்த்து அமீரிடம் பிடிக்காத விஷயங்களை கூறுங்கள் என கேட்கப்பட்டது. அதே போல் அமீரை பார்த்து பாவனியிடம் பிடிக்காத விஷயங்களை கூறுங்கள் எனவும் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாவனி “அமீருக்கு கோபம் ஜாஸ்தியாக வரும். கோபம் வந்துருச்சுன்னா எல்லாமே பறக்கும்” என கூறினார். அதே போல் அமீர் “பாவனி கோபப்படுவது பிடிக்காது, பார்ட்டிக்கு போவது பிடிக்காது, குறிப்பாக பிரியங்காவுடன் பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது” என கூறினார். இவ்வாறு மாறி மாறி உண்மையை உளறிக்கொட்டினர்.
