Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உலகிலேயே அழகானவங்க இவங்க தான் பாத்துக்கோங்க…

HOLLYWOOD

உலகிலேயே அழகானவங்க இவங்க தான் பாத்துக்கோங்க…

உலகிலேயே அழகான பெண்மணி இந்த ஹாலிவுட் நடிகை தான் என லண்டன் மருத்துவமனையின் ஒரு ஆய்வு கூறியுள்ளது.

லண்டனை சேர்ந்த “Centre for Advanced Facial Cosmetic and Plastic Surgery” என்ற ஒரு பிரபல காஸ்மெடிக் சிகிச்சை மருத்துவமனை உலகளாவிய ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதாவது “PHI’ என்று அழைக்கப்படும் பழங்கால  Face Mapping தொழில்நுட்பத்தைக் கொண்டு யார் இந்த உலகில் அழகான முக அமைப்பு கொண்டவர்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வை நடத்தியவர் “Centre for Advanced Facial Cosmetic and Plastic Surgery”-ஐ சேர்ந்த டாக்டர். ஜூலியன் டி சில்வா என்பவர். இவர் நடத்திய இந்த ஆய்வின் முடிவு படி “PHI” எனப்படும் Face mapping தொழில்நுட்பத்தின் கீழ் Greek golden Ratio என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த உலகின் அழகான பெண்மணி, ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட் தான் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆம்பர் ஹெர்ட் பிரபல ஹாலிவுட் திரைப்படமான “அக்வா மேன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். ஆம்பேர் ஹெர்ட் சமீபத்தில் தனது முன்னாள் கணவரும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகருமான ஜானி டெப் மேல் பல அவதூறான குற்றச்சாட்டுகளை குவித்து அவரை கோர்ட்டுக்கு இழுத்தார். ஆனால் அந்த வழக்கில் ஜானி டெப் தான் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அந்த ஆய்வில் உலகின் அழகான ஆண் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தான் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான “பேட் மேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் “ஹாரி பாட்டர்”, “டிவைலைட்” போன்ற பல பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in HOLLYWOOD

To Top