CINEMA
அமலா பாலை நீங்கள் திருமணம் செய்ய வேண்டுமா? இதை பாருங்கள்..
அமலா பால் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேன்டும் என்பது குறித்து ஒரு சுவாரசியமான பதிலை தெரிவித்துள்ளார்.
“மைனா” திரைப்படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அமலா பால். அதன் பின் அவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார்.
சினிமா உலகில் வெள்ளை நிறத் தோளுக்கு டிமாண்ட் அதிகமாகி கொண்டிருந்த வேளையில் Dusky கலரில் வந்து இளைஞர்களின் மனதை வலை போட்டு இழுத்து போய் விட்டார்.
அமலா பால் தமிழில் மட்டுமல்லாது பல தென்னிந்திய திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களோடு நடித்திருக்கிறார். தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், ஆர்யா, சித்தார்த், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் மலையாளத்தில் மோகன் லால், ஃபகத் ஃபாசில், ஜெயராம், ஜெய சூர்யா, குஞ்சக்கோ போபன் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ராம் சரண், நாக சைதன்யா ஆகியோருடனும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தமிழில் “ஆடை” என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்தார். எனினும் அத்திரைப்படம் சரியாக கை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமலா பால் தன்னுடைய ரசிகர்களிடம் “வெகு நாட்கள் ஆகிறது, வாருங்கள் பேசலாம்” என கூறியிருந்தார். அதன் படி ஒரு ரசிகர் “உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் என்னென்ன தகுதிகள் வேண்டும் ?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமலா பால் “உண்மையாக நான் இது வரை அதனை கண்டுபிடிக்கவில்லை. நான் என்னை கண்டடைவதற்கான ஒரு சுய பயணத்தில் இருக்கிறேன். எனக்கு அது தெரிந்தவுடன் உங்களுக்கு நிச்சயம் கூறுகிறேன்” என கூறியுள்ளார்.
