TELEVISION
ராமர் கையில் வலுக்கட்டாயமாக ராக்கி கட்டிய அமலா பால்.. ஐய்யோ போச்சே!!
ராமர் கையில் ராக்கி கட்டி இதயத்தை சுக்கு நூறாக உடைத்துள்ளார் அமலா பால்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலகலப்பாக வந்து நம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ராஜூ ஜெயமோகன். இவர் 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரீயலான “கனா காணும் காலங்கள்” தொடரில் நடித்துள்ளார். மேலும் அதனை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி சீசன் 2”, “ஆண்டாள் அழகர்”, “பாரதி கண்ணம்மா” ஆகிய சீரீயல்களில் நடித்துள்ளார்.
எனினும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2 தொடரில் தான் ஓரளவு பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து ராஜூ ஜெயமோகனை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டுச் சென்றது “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி என்றே கூறலாம். அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பலரையும் சிரிக்கவைத்து பார்வையாளர்களை என்டெர்டெயின் செய்தார். “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலையும் தட்டிச் சென்றார்.
ராஜூ ஜெயமோகன் இயக்குனர் பாக்யராஜ்ஜிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். பாக்யராஜ் கதை வசனம் எழுதிய “துணை முதல்வர்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின் “மனிதன்”, “நட்புன்னா என்னனு தெரியுமா”, “முருங்கைக்காய் சிப்ஸ்”, “டான்” என பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் “பிபி ஜோடிகள்” சீசன் 2 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ தற்போது “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற கலகலப்பான ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்த வாரம் நம் மனதை கொள்ளை கொண்ட அமலா பால் கலந்து கொள்கிறார். அதில் விஜய் டிவி காமெடி நட்சத்திரங்களான மதுரை முத்து, ராமர் ஆகிய பலரும் கலந்து கொண்டு ரகளையை கிளப்பியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்த புரோமோவில் அமலா பால் ராமருக்கு வலுக்கட்டாயமாக ராக்கி கட்டினார். இதனால் ராமர் சோகம் ஆகிறார். இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
