TELEVISION
எனக்கு செல்லப் பிராணிகளை பிடிக்காதா?? எமோஷனல் ஆன ஆல்யா!
ரசிகர்கள் இன்ஸ்டா பக்கத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு ஆல்யா மானசா பதிலளித்து வந்தார். அதில் ஒருவர் செல்லப் பிராணிகள் வளர்ப்பு குறித்து கேட்ட கேள்விக்கு திடீரென எமோஷனல் ஆனார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” தொடரில் செம்பா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா. இவருக்கும் அதே தொடரில் நடித்த சஞ்சீவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பின் தனது உடலை பழையபடி மெருகேற்றி மீண்டும் “ராஜா ராணி” இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.
இதனிடையே மீண்டும் அவர் கர்ப்பம் ஆக சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஆல்யா மானசா படப்பிடிப்பை எல்லாம் தள்ளி வைத்து விட்டு தற்போது முழு நேரம் தனது குழந்தைகளை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் தாயாக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் “Q&A session”-ல் ரசிகர்கள் பலர் ஆல்யா மானசாவிடம் பல கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்து வந்தார் ஆல்யா மானசா. அப்போது ஒருவர் “உங்களுக்கு செல்லப் பிராணிகளே பிடிக்காதா? “ என கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு எமோஷனல் ஆன ஆல்யா மானசா “எனக்கு செல்லப் பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஆனால் சிறு வயதில் இருந்தே செல்லப் பிராணிகளை பேணி காத்து வளர்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் நடிப்பிற்கு தற்காலிகமாக நோ சொன்ன ஆல்யா மானசா தற்போது மீண்டும் நடிக்க வருவதாக சில பேச்சுக்கள் அடிபடுகின்றன.