Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஊ சொல்றியா” அக்சய் குமார்.. நெஞ்சை பிடித்து கிள்ளிய சமந்தா; வைரல் வீடியோ

CINEMA

“ஊ சொல்றியா” அக்சய் குமார்.. நெஞ்சை பிடித்து கிள்ளிய சமந்தா; வைரல் வீடியோ

அக்சய் குமாருடன் சமந்தா “ஊ அண்ட்டவா” பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. அப்பாடலில் சமந்தா குட்டை பாவாடையில் ஆடிய கவர்ச்சி நடனம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

இப்பாடலின் மூலம் சமந்தா “கிளாமர் கியூன்” என்ற செல்லப் பெயரை தட்டிக் கொண்டுப் போனார். இந்தியாவே இந்த பாடலை பல மாதங்களாக முணுமுணுத்தது.

சமந்தாவிற்கு அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் குவிவதாக கூறப்படுகிறது. ஒரே பாடலில் ஒட்டு மொத்த இந்திய இளைஞர்களையும் தூங்க விடாமல் பேன் இந்திய அழகியாக மாறிப்போனார் சமந்தா.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல நிகழ்ச்சியான “காஃபி வித் கரண்” சீசன் 7 நிகழ்ச்சியில் அக்சய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அக்சய் குமாருடன் “ஊ அண்ட்டாவா” பாடலுக்கு சமந்தா நடனமாடினார். அப்பாடலில் வருவது போலவே அக்சய் குமாரின் நெஞ்சை கிள்ளியபடியே மோகப் பார்வையுடன் அசைந்து கொடுக்கிறார் சமந்தா. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “காஃபி வித் கரண்” நிகழ்ச்சி தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

சமந்தாவிற்கு “யசோதா”, “சகுந்தலா” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “குஷி” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் சமந்தா லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top