CINEMA
“தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது”.. மீண்டும் இணையும் “தீனா” கூட்டணி
நடிகர் அஜித்திற்கு “தல” என்று பெயர் வருவதற்கான காரணமாக அமைந்த நபர் அஜித்துடன் மீண்டும் இணையவுள்ளார்.
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை செல்லமாக “தல” என்று அழைப்பார்கள். சமீபத்தில் “என்னை தல என்று கூறாதீர்கள்” என அஜித் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் ரசிகர்கள் மனதில் இப்போதும் “தல” ஆக வலம் வருகிறார்.
இந்நிலையில் அஜித்திற்கு “தல” என்ற பெயர் வர காரணமாக இருந்த அந்த “தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது” என்ற வசனத்தை தீனா திரைப்படத்தில் பேசிய மகாநதி ஷங்கர் தற்போது “AK 61” திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போனி கபூர்- ஹெச். வினோத்-அஜித் கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படமான “AK 61” திரைப்படத்தின் ஐதராபாத்தில் நடப்பதாக அறியப்படுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் போனி கபூர் “அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்டில் முடிவடைந்துவிடும், தீபாவளிக்கு இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் மகாநதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. போனி கபூர்- ஹெச். வினோத்-அஜித் கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படமான “நேர்கொண்ட பார்வை” ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் நல்ல விமர்சங்களே வந்தன. அதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் “வலிமை” திரைப்படம் வெளிவந்தது. தற்போது மீண்டும் மூவர் கூட்டணியில் “AK 61” திரைப்படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.