CINEMA
“AK 61” திரைப்படத்தில் பாடல்கள் கிடையாதா? செம மேட்டரா இருக்கே..
அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் “AK 61” திரைப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் சரியாக எடுபடவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அஜித், ஹெச். வினோத் இணைந்து உருவாக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றது.
திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமன்ட் காட்சிகள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் அந்த காட்சிகள் ஒரு பக்கம் இணையத்தில் கலாய்த்துத் தள்ளப்பட்டது. “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஹெச். வினோத் இயக்க போனி கபூர் இத்திரைப்படங்களை தயாரித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அஜித்-ஹெச். வினோத்-போனி கபூர் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளனர். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு “AK 61” திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மகாநதி ஷங்கர், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் “AK 61” திரைப்படம் குறித்தான சுவாரசியமான தகவல்கள் பல கசிந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அதாவது “AK 61” திரைப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாதாம். திரைப்படத்தின் கதை பேங்க் ராப்பரியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாம். ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக “AK 61” உருவாகிக் கொண்டிருக்கிறதாம். ஆதலால் வெறித்தனமான ஒரு மாஸ் ஹிட் திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு தயார் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை.
