CINEMA
“AK 61” ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது??
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “AK 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளிவரும் என தகவல் வந்துள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் சரியாக எடுபடவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அஜித், ஹெச். வினோத் இணைந்து உருவாக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றது.
திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமன்ட் காட்சிகள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் அந்த காட்சிகள் ஒரு பக்கம் இணையத்தில் கலாய்த்துத் தள்ளப்பட்டது. “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஹெச். வினோத் இயக்க போனி கபூர் இத்திரைப்படங்களை தயாரித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அஜித்-ஹெச். வினோத்-போனி கபூர் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளனர். “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு மாஸான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது போனி கபூரின் மனைவியான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று “AK 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
“AK 61” திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மகாநதி ஷங்கர், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் கதை பேங்க் ராப்பரியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.