Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ரசிகருக்கு அஜித் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து.. என்ன மனசுயா இவருக்கு?

CINEMA

ரசிகருக்கு அஜித் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து.. என்ன மனசுயா இவருக்கு?

ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது கைப்பட எழுதி உள்ளார் நடிகர் அஜித் குமார். இச்செய்தி ரசிகர்களிடேயே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த பல நாட்களாக வித விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது கைப்பட ஒரு வாழ்த்துச் செய்தியை எழுதியுள்ளார். அதில் “அன்புள்ள லவன், நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் அஜித் அந்த ரசிகருக்கு தொலைப்பேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. அந்த ரசிகர் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் முன் கூட்டியே தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அஜித். இப்புகைப்படம் இணையத்தில் தீயாக வைரல் ஆகி வருகிறது, அஜித் ரசிகர்கள் பெரும் குஷியில் அஜித்தை மனதார பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதனிடையே படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள் போல. இந்த இடைவேளையில் அஜித் தனது கனவு பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் பைக்குடன் ஐரோப்பா நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top