CINEMA
“உலகம் சுற்றும் வாலிபன்”.. அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
பைக்கில் உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அஜித் குமார் ஒரு பைக் ரேஸர் என்பது உலகம் அறிந்ததே. வித விதமான Luxury பைக்குகளில் ஊர் சுற்றுவது என்பது அஜித்தின் ஹாப்பி. இந்தியாவின் பல மூலைகளில் அஜித் பைக்குடன் சுற்றும் பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு இருக்கும்.
படப்பிடிப்பு நாட்களை தவிர்த்து மற்ற ஏனைய நாட்கள் அவர் பைக்குடன் எங்கேயாவது ஊர் சுற்றிக் கொண்டு தான் இருப்பார். அஜித்திற்கு உலக நாடுகள் பலவற்றை தனது பைக்கில் சுற்ற வேண்டும் என்று பல நாள் ஆசை என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் தனது கனவு பயணத்தை அஜித் குமார் தொடங்கி விட்டார். அதாவது ஐரோப்பா கண்டத்தில் பல நகரங்களில் தற்போது அஜித் குமார் பைக்குடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் போல. “AK 61” திரைப்படத்தின் கெட் அப்போடு தனது அருகில் ஒரு விலை உயர்ந்த Ultra model பைக்குடன் அஜித் தென்படும் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படங்களை அஜித்துடன் பயணிக்கும் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்த Schedule-க்கான இடைவேளை கிடைத்திருப்பதாக தெரிகிறது. இந்த இடைவேளையை அஜித் தனது கனவு பயணத்திற்காக செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
“AK 61” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தை அஜித்தின் முந்தைய திரைப்படங்களான “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். அதே மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் “AK 61” திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.