CINEMA
அஜித் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸை பகிர்ந்த மேனேஜர்?.. எதற்காக? ஏன்?
அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் ஒன்றை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் “வலிமை” திரைப்படத்தை தொடர்ந்து “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் “AK 61” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
போனி கபூர்-வினோத்-அஜித் ஆகிய மூவர் கூட்டணியில் “AK 61” மூன்றாவது திரைப்படமாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அது அஜித் தனது வாட்ஸ் ஆப்பில் வைத்த ஸ்டேடஸ் என கூறப்படுகிறது. அப்புகைப்படத்தில் ஆறு படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. முதல் படத்தில் ஒரு தம்பதியினர் கழுதையை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அதனை பார்க்கும் சிலர் “இவர்களுக்கு கழுதை மேல் எப்படி சவாரி செய்வது என்று கூட தெரியவில்லை” என கூறி சிரிக்கிறார்கள்.
இரண்டாவது படத்தில் தம்பதியினர் கழுதையின் மேல் சவாரி செய்கிறார்கள். அதை பார்க்கும் சிலர் “ஒரு விலங்கை இப்படி துன்புறுத்துகிறார்களே” என கூறுகின்றனர்.
மூன்றாவது படத்தில் தம்பதியினரில் மனைவி மட்டும் கழுதையில் சவாரி செய்கிறார். அதனை பார்க்கும் சிலர் “கணவன் தான் எஜமானி, அவன் தான் கழுதையின் மேல் சவாரி செய்ய வேண்டும்” என கூறுகிறார்கள்.
நான்காவது படத்தில் தம்பதியினரில் கணவன் மட்டும் கழுதையில் சவாரி செய்கிறார். அதனை பார்க்கும் சிலர் “என்ன ஒரு சுயநல புத்தி இவனுக்கு. மனைவியை நடக்கவிட்டு விட்டு இவன் மட்டும் சொகுசாக சவாரி செய்கிறானே” என கூறுகிறார்கள்.
ஐந்தாவது படத்தில் தம்பதியினர் கழுதையை தூக்கி கொண்டு போகிறார்கள். அதனை பார்க்கும் சிலர் “இவரகள் என்ன கழுதையை தூக்கி கொண்டு போகிறார்கள், சரியான முட்டாள் தம்பதியினராக இருப்பார்கள் போல” என கூறுகிறார்கள்.
ஆறாவது படத்தில் கதையின் தத்துவம் என குறிப்பிட்டு மூன்று கருத்துக்கள் தென்படுகின்றன.
- எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது
- நீங்கள் என்ன செய்தாலும் உங்களை விமர்சிக்க சிலர் இருக்கத் தான் செய்வார்கள்
- ஆதலால், உங்களுக்கு சரி என்று தோன்றுபவைகளை செய்யுங்கள். விமர்சனத்திற்காக தயங்காதீர்கள்
என்று குறிப்பிட்டுள்ளது.
எதை குறிப்பதற்காக சுரேஷ் சந்திரா இதனை பகிர்ந்துள்ளார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அஜித் சிவாவுடன் மீண்டும் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியானது. அதனை இணையத்தில் பலர் கலாய்த்து தள்ளினர். ஒரு வேளை அதனை குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டிருக்கிறாரோ என வியூகிக்க வைக்கிறது. மேலும் இது அஜித்தின் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் எனவும் செய்திகள் பரவுகின்றன. அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.
To whom so ever it may concern!
Unconditional love.
Ajith pic.twitter.com/v6c4cmB4f7— Suresh Chandra (@SureshChandraa) May 30, 2022