Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வலிமையை ஓவர் டேக் செய்த விக்ரம்”… மாஸ் ஹிட்

CINEMA

“வலிமையை ஓவர் டேக் செய்த விக்ரம்”… மாஸ் ஹிட்

“வலிமை” செய்த சாதனையை ஓவர் டேக் செய்துள்ளது “விக்ரம்” திரைப்படம்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான வரவேற்பையே பெற்றிருந்தன. எனினும் அஜித் ரசிகர்கள் அத்திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடினர்.

அம்மா சென்டிமன்ட் காட்சிகள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் இணையத்தில் நெட்டிசன்கள் அக்காட்சிகளை ஒரு பக்கம் கலாய்த்து தள்ளினர். எனினும் திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சிகள் கிளாப்ஸை அள்ளின. அதிசயக்கத்தக்க வகையில் பார்வையாளர்களை பைக் ஸ்டன்ட் காட்சிகள் கவர்ந்திழுத்தன.

“வலிமை” திரைப்படம் வெளியாகி அதிக வசூலை ஈட்டியிருந்த நிலையில் அதற்கு பிறகு வந்த எந்த தமிழ் திரைப்படமும் “வலிமை”யை ஓவர் டேக் செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி வெளியான “விக்ரம்” திரைப்படம் “வலிமை”யை ஓவர் டேக் செய்துள்ளது.

அதாவது வெளிவந்த 10 நாட்களிலேயே உலகளவில் ரூ. 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. ஆதலால் “வலிமை”யை “விக்ரம்” ஓவர் டேக் செய்து சாதனை படைத்துள்ளது.

பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.

 அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார். கமல் ஹாசன் கேரியரிலேயே வேற லெவல் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. ஆதலால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் குஷியில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top