CINEMA
சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கும் அஜித்… வைரல் வீடியோ
நடிகர் அஜித் குமார் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாரும் போலவே பொருள் வாங்கும் வீடியோ ஒன்று வெளிவந்து இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறது.
நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த பல நாட்களாக வித விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கப்பல், ஹோட்டல், என அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கங்கெல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அஜித் தற்போது லண்டனில் இருப்பதாக தெரிகிறது. அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அஜித் பொருள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது.
அதில் அஜித் ஸ்டைலாக கோர்ட் சூட் அணிந்து “AK61” பட கெட் அப்பில் இருக்கிறார். பில் கவுண்ட்டரில் இருப்பவரிடம் கை கொடுத்து சிரித்து பேசுகிறார். அதன் பின் தான் வாங்கிய பொருளுக்கு தனது கிரெடிட் கார்டில் பில் செலுத்துகிறார். அதன் பின் அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்.
Ajith sir in London.
| Video: Yathees | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/qKGjtfa4Xy
— Ajith (@ajithFC) July 4, 2022
இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொது வெளிவந்து இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள் போல. இந்த இடைவேளையில் அஜித் தனது கனவு பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் பைக்குடன் ஐரோப்பா நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கும் பல புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.
சென்ற வாரம் அஜித் தனது ரசிகருக்கு கைப்பட எழுதிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வைரல் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது அஜித் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன.
