CINEMA
துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட அஜித்.. வைரல் வீடியோ
நடிகர் அஜித் குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பைக் ரேஸர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மட்டுமல்லாது அவருக்கு விமானம் ஓட்டுவதிலும், துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் உண்டு. இவ்வாறு பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் அஜித் குமார்.
இந்நிலையில் திருச்சியில் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் அஜித் குமார் கலந்துகொண்டுள்ளார். அஜித் குமார் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பல காலமாக ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 46 ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் குமாரும் அவரது குழுவும் 6 பதக்கங்களை வென்றனர். இதனை தொடர்ந்து தற்போது அஜித் குமார் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Video Of #AK #AjithKumar At Trichy Rifle Club this morning.. 🔥 #AK61 pic.twitter.com/4kNGsY6w5H
— Ramesh Bala (@rameshlaus) July 27, 2022
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.
இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான வரவேற்பையே பெற்றது. எனினு “AK 61” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறிக்கொண்டு அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
