Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தலன்னா தல தான்! ஏர்போர்ட்டில் அஜித் செய்த காரியத்தை பாருங்க!!

CINEMA

தலன்னா தல தான்! ஏர்போர்ட்டில் அஜித் செய்த காரியத்தை பாருங்க!!

ஏர்போர்ட்டில் அஜித் செய்த காரியத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.

“AK 61” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Robbery-ஐ மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் போதை பொருள் கடத்தல் கும்பல் பற்றியது. அதே போல் இந்த “AK 61” திரைப்படமும் ஒரு சமூக விழிப்புணர்வு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவது போல் தெரிகிறது.

நடிகர் அஜித் படப்பிடிப்பின் இடைவேளையில் ஐரோப்பிய நாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார். கடந்த பல நாட்களாக வித விதமாக ஐரோப்பிய நாடுகளில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கப்பல், ஹோட்டல், என அவர் எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ அங்கங்கெல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அஜித் தற்போது தனது ஜாலி டிரிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்படும்போது காரில் லக்கேஜ்ஜை ஏற்றிக் கொண்டிருந்த அஜித் திடீரென அங்கிருந்த காவலர் ஒருவருக்கு கைக் கொடுத்து சல்யூட் செய்தார். இதனை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் இந்த வீடியோ பகிர்ந்து “அஜித் ஒரு சிறந்த மனிதர்” என பாராட்டுக்களை கொட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top