CINEMA
கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தல அஜித்.. வைரல் புகைப்படங்கள்..
அஜித் குமார் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டபோது வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெற்ற 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதில் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்றார்.
அதாவது சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டர் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும் என 4 தங்கப் பதக்கங்களை அஜித் குமார் வென்றுள்ளார்.
மேலும் 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கமும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கமும் என 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் அஜித் குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ…
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 46 ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் குமாரும் அவரது குழுவும் 6 பதக்கங்களை வென்றனர். இதனை தொடர்ந்து தற்போது அஜித் குமார் 47 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு அதே போல் 6 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவனுடன் இணைய உள்ளது கூடுதல் தகவல்.
