CINEMA
அஜித் இப்போ எங்க இருக்காரு தெரியுமா? உலகம் சுற்றும் வாலிபனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
நடிகர் அஜித் தற்போது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு வரும் நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் குமார் ஒரு பைக் ரேஸர் என்பது உலகம் அறிந்ததே. வித விதமான Luxury பைக்குகளில் ஊர் சுற்றுவது என்பது அஜித்தின் ஹாப்பி. இந்தியாவின் பல மூலைகளில் அஜித் பைக்குடன் சுற்றும் பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு இருக்கும்.
படப்பிடிப்பு நாட்களை தவிர்த்து மற்ற ஏனைய நாட்கள் அவர் பைக்குடன் எங்கேயாவது ஊர் சுற்றிக் கொண்டு தான் இருப்பார். அஜித்திற்கு உலக நாடுகள் பலவற்றை தனது பைக்கில் சுற்ற வேண்டும் என்று பல நாள் ஆசை என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
இதனிடையே தனது கனவு பயணத்தை தொடங்கிய அஜித் ஐரோப்பா கண்டத்தில் பல நகரங்களில் தற்போது பைக்குடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் தனது Ultra Modern பைக்குடன் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அஜித் பைக்கிலேயே பெல்ஜியம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சுற்றுலா தளமான அடாமியம் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அப்புகைப்படங்கள் இதோ…
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்த Schedule-க்கான இடைவேளை கிடைத்திருப்பதாக தெரிகிறது. இந்த இடைவேளையை அஜித் தனது கனவு பயணத்திற்காக செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
“AK 61” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தை அஜித்தின் முந்தைய திரைப்படங்களான “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். அதே மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் “AK 61” திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.