CINEMA
அஜித் படத்தில் கே ஜி எஃப் வில்லனா? அடேங்கப்பா..
அஜித் நடித்து வரும் “AK 61” திரைப்படத்தில் கே ஜி எஃப் திரைப்படத்தின் வில்லன் நடிகர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித் தற்போது “AK 61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.
“AK 61” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Robbery-ஐ மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் ஓரளவு கலவையான வரவேற்பையே பெற்றது. எனினு “AK 61” திரைப்படத்திற்கு ரசிகர்கள் வெறிக்கொண்டு அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அஜித் குமார் நடித்து வரும் “AK 61” திரைப்படத்தின் வில்லன் குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது “கே ஜி எஃப் 2” திரைப்படத்தில் அதீராவாக வந்து பட்டையைக் கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தட் “AK 61” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.
“கே ஜி எஃப் 2” திரைப்படத்தில் சஞ்சய் தட் டெரரான வில்லனாக வந்து பார்வையாளர்களை அசர வைத்தார். அவர் தென்படும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை Goosebumps-ல் ஆழ்த்தியது. “சஞ்சய் தட் அஜித்துக்கு வில்லனாக நடித்தால் கொலை மாஸாக இருக்கும்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
