CINEMA
“ACTION HEROINE” ஆக களம் இறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…? தலைவிக்கு தில்ல பார்த்திங்களா?
ஐஸ்வர்யா ராஜேஷ் “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அவர் “ஆக்சன் ஹீரோயின்” ஆக நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் கதாநாயகிகளில் கதாப்பாத்திரத் தேர்வுகளின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் இவருக்கென்று தனி இடம் இருக்கும். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகிவரும் “டிரைவர் ஜமுனா” என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. அதில் கேப் ஓட்டும் டிரைவராக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இத்திரைப்படம் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என அறியப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே பல கேப் டிரைவர்களிடம் பழகி அவர்களின் மனநிலை என்ன, எப்படியெல்லாம் நடந்து கொள்ளுவார்கள் என்று தெரிந்து கொண்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதன் பின்பு அவர் அத்திரைப்படத்தில் நடித்தாராம். இதே போல் “கனா” திரைப்படத்திலும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக நடித்திருப்பார். அத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பும் அவர் முறையான கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டே நடித்தார். அதே போல் “டிரைவர் ஜமுனா” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் திரைப்படத்தில் பல ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதில் எந்த டூப்பும் இல்லாமல் ஒரிஜினலாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம். இவ்வாறு பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்துள்ளன.
சமீபத்தில் வெளிவந்த “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் போஸ்டரை பார்த்த போது அதில் கெத்தாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேநீர் அருந்திக்கொண்டு இருப்பார். அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருக்கும். இதில் இருந்து இத்திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் இடம்பெருகிறது என உறுதியாகியுள்ளது.