Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஏஜண்ட் டீனா ஏற்கனவே கமல் கூட நடிச்சிருக்காங்க ன்னு எத்தன பேருக்கு தெரியும்?

CINEMA

ஏஜண்ட் டீனா ஏற்கனவே கமல் கூட நடிச்சிருக்காங்க ன்னு எத்தன பேருக்கு தெரியும்?

கமல் ஹாசனுடன் ஏஜண்ட் டீனா “விக்ரம்” திரைப்படத்திற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரல் ஆகி உள்ளது.

 

“விக்ரம்” திரைப்படத்தில் ஏஜேண்ட் டீனா என்ற கதாப்பாத்திரம் ஒரு Goose bumps கதாப்பாத்திரமாக பார்வையாளர்களுக்கு அமைந்தது. கமல் ஹாசன் வீட்டில் பணியாளாக இருந்த ஏஜெண்ட் டீனா திடீரென ஒரு Transformation கொடுப்பார்.

கமல் ஹாசனின் பேரனை கடத்தி கொண்டு போவதற்கு ஒரு கும்பல் கமல் வீட்டிற்குள் இறங்கிவிடும். அப்போது கமலின் மருமகளையும் அப்பேரனையும் காப்பாற்ற திடீரென Transformation ஆகி ரவுடிகளை பறந்து பறந்து அடித்து தூள் கிளப்பி விடுவார். இக்கதாப்பாத்திரம் பார்வையாளர்களால் பரவலாக ரசிக்கப்பட்டது.

“விக்ரம்” திரைப்படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்திருந்தவர் வசந்தி. இவர் ஒரு டேன்சர். பல திரைப்படங்களில் பின்னணியில் Troop dancer ஆக நடனம் ஆடி இருக்கிறார். நடன அமைப்பாளர் தினேஷுடன் பணியாற்றியவர்.

“விக்ரம்” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் விஜய், அஜித் பாடல்களில் பின்னணியில் வசந்தி நடனம் ஆடும் பல புகைப்படங்களை இணையத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். அதன் பின் பல சமூக ஊடக தொலைக்காட்சிகளும் வசந்தியை பேட்டிக் கண்டனர்.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்திற்கு முன்பே வசந்தி கமலுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என இணையத்தில் ஒரு புகைப்படம் பரவுகிறது. அதாவது கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான “அன்பே சிவம்” திரைப்படத்தில் வசந்தி நடித்திருக்கிறார் என அப்புகைப்படம் உறுதி செய்கிறது. அப்புகைப்படம் இதோ..

இப்புகைப்படத்தை பார்க்கையில் வசந்தி “அன்பே சிவம்” திரைப்படத்தில் நாடக குழு கூத்து கட்டும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top