CINEMA
மோகப் பார்வையால் கொலை செய்யும் அதிதி ஷங்கர்.. வைரல் வீடியோ
மோகப் பார்வையால் ஆளை கொல்லும் விதமாக அதிதி ஷங்கர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த “விருமன்” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள்ளார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள்ளார். “மாவீரன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
“மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்திற்கான பூஜையில் சிவகார்த்திகேயனும் அதிதி சங்கரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
அதிதி ஷங்கர் “விருமன்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்ததும் பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் வெளிச்சத்திற்கே வராத ஷங்கரின் மகள் திடீரென சினிமாவிற்குள் நுழைவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
“விருமன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “கஞ்சா பூவு கண்ணால” என்ற பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் கிராமத்து பெண்ணாக அதிதி ஷங்கர் பக்காவாக பொருந்தியது ரசிகர்களை “ஓ” போட வைத்தது. “ஷங்கர் பொண்ணா இவங்க” என்பது போல் பலரும் “ஆ” என வாயை பிளந்து பார்த்தனர்.
அதிதி ஷங்கர் எப்போதுமே தன்னை மார்டன் பெண்ணாக காட்டிக்கொள்பவர். அதுவும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் டாப் மாடல்கள் அணியும் கண்கவர் ஆடைகளை உடுத்தி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் அவரது பிறந்தநாள் பார்ட்டியில் டாப் கிளாமர் உடையில் கண்களை மயக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் மோகப் பார்வையை காட்டி பார்வையாளர்களை சாய்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
View this post on Instagram
