CINEMA
“இனிமே எனக்கு இவ்வளவு சம்பளம் அதிகம் வேணும்”… ஆர்டர் போடும் கே ஜி எஃப் நடிகை
கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி தனது சம்பளமாக எவ்வளவு கோடி கேட்டுள்ளார் தெரியுமா?
கே ஜி எஃப் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் கலெக்சன் அள்ளிக் கொண்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி செட்டி, தனது காந்த கண்களால் அழகிய பதுமையாய் வந்து இளைஞர்களை கொள்ளைக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தனது திரைப்படத்திற்காக ஸ்ரீநிதியை அணுகியுள்ளார். ஆனால் அவர் கூறிய சம்பளத்தை கேட்டு அந்த டைரக்டர் அரண்டு போனாராம்.
அதாவது ஸ்ரீநிதி ஷெட்டி ரூ. 2 கோடி சம்பளம் அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆதலால் அந்த தயாரிப்பாளர் அவரை கன்வின்ஸ் செய்ய முடியாமல் சோகமாய் கிளம்பிவிட்டாராம். அதன் பின் அந்த இயக்குனர் “கே ஜி எஃப் திரைப்படம் யாஷ்க்காக ஓடிய படம். ஸ்ரீநிதிக்காக ஓடவில்லை” என சர்ச்சையாக பேசியுள்ளாராம்.
ஸ்ரீநிதி ஷெட்டி கே ஜி எஃப் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடித்த “கோப்ரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அத்திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது. அதன் பின் அவர் கைகளில் எந்த திரைப்படமும் இல்லை என அறியப்படுகிறது. ஒரு வேளை சம்பளத்தை அதிகப்படுத்தியதால் தான் வாய்ப்புகள் வரவில்லையோ என சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் எடுபடுகின்றன.