GALLERY
ஹிப் ஹாப் தமிழா நடிகையின் அசரவைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்..
ஹிப் ஹாப் ஆதி திரைப்படத்தின் நடிகை ஆத்மிகாவின் வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஆத்மிகா, ஹாப் ஹாப் ஆதி நடித்த “மீசைய முறுக்கு” திரைப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
“மீசைய முறுக்கு” திரைப்படத்திலேயே க்யூட்டாக நடித்து இளைஞர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.
ஆத்மிகா கார்த்திக் நரேன் இயக்கிய “நரகாசூரன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் “காட்டேரி”, “கண்ணை நம்பாதே” ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்திரைப்படங்களும் இன்னும் வெளிவரவில்லை.
மேலும் ஆத்மிகா பிக் பாஸ் முகின் ராவுடன் “மயக்கிறியே” என்ற ஆல்பம் பாடலில் தோன்றினார். அப்பாடல் இணையத்தில் வேற லெவல் ஹிட் ஆனது. மேலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற “OPPO” Chennai times fresh face நிகழ்ச்சிக்கு நடுவராகவும் திகழ்ந்தார்.
ஆத்மிகா கோவை மாநகரில் பிறந்திருந்தாலும் தொழில் காரணமாக சென்னைக்கு வந்து செட்டில் ஆனவர். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வண்ண வண்ண உடையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆத்மிகா ஏற்கவே மாடல் என்பதால் அவரது புகைப்படங்கள் கவர்ச்சியில் படு தூக்கலாக இருக்கிறது.
ஆத்மிகாவிற்கு கூடுதல் அழகே அவரின் கண்கள் தான். அந்த காந்த கண்களை வைத்துக் கொண்டு இளைஞர்களை திணறடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பல கண் கவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
