CINEMA
தமிழின் முன்னணி நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரை உலகம்
தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.
கேரளாவில் பிறந்த பிரதாப் போத்தன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “அழியாத கோலங்கள்”, “மூடுபனி”, “வறுமையின் நிறம் சிகப்பு”, “குடும்பம் ஓர் கதம்பம்”, “பன்னீர் புஷ்பங்கள்”, “வாழ்வே மாயம்” “புதுமை பெண்” என 80களில் வெளிவந்த பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இவ்வாறு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட தமிழில் “பொன்மகள் வந்தாள்”, “துக்ளக் தர்பார்”, “கமலி ஃபரம் நடுக்காவேரி” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிரதாப் போத்தன் பல வெற்றித் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தமிழில் அவர் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை” ,சத்யராஜ் நடித்த “ஜீவா”, கமல் ஹாசன் நடித்த “வெற்றி விழா”, “பிரபு நடித்த “மைடியர் மார்த்தாண்டம்”, சத்யராஜ் நடித்த “மகுடம்”, “ஆத்மா”, “சீவலப்பேரி பாண்டி”, லக்கி மேன்” ஆகிய பல திரைப்படங்கள் தமிழின் முக்கிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.
பிரதாப் போத்தன் 1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின் அமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கேரள மாநில விருது, இந்திரா காந்தி விருது, SIIMA விருது, ஃபிலிம் ஃபேர் விருது என பல விருதுகளை பிரதாப் போத்தன் பெற்றுள்ளார். இவ்வாறு தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் முக்கிய கலைஞராக திகழ்ந்த பிரதாப் போத்தன் சற்று நேரத்திற்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். இச்செய்தி ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்து உள்ளது.