CINEMA
“தாயே மீனாட்சி, எப்படியாவது ஜெயிக்க வச்சிடு”.. மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்தி ஸ்பெஷல் தரிசனம்
“விருமன்” திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்தி தரிசனம் செய்தார்.
கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இதற்கு முன் முத்தையா கார்த்தியை வைத்து “கொம்பன்” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “விருமன்” திரைப்படத்தில் மீண்டும் கார்த்தியுடன் இணைந்துள்ளார்.
“விருமன்” திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ் ஆகிய பலரும் நடித்துள்ளனர். 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“விருமன்” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவில் சூர்யா, அதிதி ஷங்கர், இயக்குனர் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, சு. வெங்கடேசன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கார்த்தி மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்பெஷல் தரிசனம் செய்தார். அப்போது அங்கே உள்ள ஒருவர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
Our @Karthi_Offl Anna Visited Madura Meenakshi Temple 🙏🙏@dir_muthaiya @prabhu_sr @2D_ENTPVTLTD @Brindhashiv #Karthi #Viruman pic.twitter.com/5qfPJWO0re
— Botha. Sridhar కారీౖ (@sridhar_botha) August 4, 2022
கார்த்திக்கு இந்த வருடத்தில் மட்டும் மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்”, “சர்தார்”, “விருமன்” என மூன்று திரைப்படங்கள். இதில் “சர்தார்” வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்” வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. “விருமன்” வருகிற 12 ஆம் தேதி வெளிவருகிறது.