CINEMA
“ஆயிரத்தில் ஒருவன் 2” New Update!!… ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்
“ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.
கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. சோழர்களின் எஞ்சிய வாரிசுகளை கண்டுபிடிக்க சென்ற தொல்லியல் குழு ஒன்று தொலைந்து போக, அந்த குழுவை தேடி மற்றொரு குழு பயணத்தை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களே இத்திரைப்படத்தின் மையக்கரு.
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வெளிவந்த சமயம் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. ஆனால் அதன் பின் இணையம் பிரபலமான போது அத்திரைப்படம் குறித்த மறு உரையாடல் பெரிதளவில் நிகழ்ந்தது.
ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான Lead கொடுத்து தான் முடித்திருப்பார் செல்வராகவன். ஆகையால் “ஆயிரத்தில் ஒருவன்” பாகம் 2 நிச்சயம் வெளிவரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்ற ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்தது. இத்திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் கூறப்பட்டது. அதன் பின் செல்வராகவன் சில திரைப்படங்கள் நடிப்பதில் பிசியாகி விட்டதால் “ஆயிரத்தில் ஒருவன் 2” குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நிருபர் ஒருவர் செல்வராகவனிடம் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதில் அளித்த செல்வராகவன் “முதலில் புதுப்பேட்டை 2 முடிந்த பின்பு தான், ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்” என பதில் அளித்தார்.
“ஆயிரத்தில் ஒருவன்” இரண்டாம் பாகம் போல் “புதுப்பேட்டை” இரண்டாம் பாகமும் பல வருடங்கள் பேச்சு வார்த்தையிலேயே இருக்கின்றன. இந்நிலையில் தற்போது “புதுப்பேட்டை 2” திரைப்படத்திற்கு பின்பு தான் “ஆயிரத்தில் ஒருவன் 2” உருவாகும் என செல்வராகவன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.