Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இது என்னுடைய கதை”… சர்ச்சையை கிளப்பிய உதவி இயக்குனர்..“விருமன்” படம் வெளியாவதில் சிக்கல்??

CINEMA

“இது என்னுடைய கதை”… சர்ச்சையை கிளப்பிய உதவி இயக்குனர்..“விருமன்” படம் வெளியாவதில் சிக்கல்??

“விருமன்” திரைப்படத்தின் கதை ஒரு உதவி இயக்குனருக்கு சொந்தமான கதை என ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் “விருமன்”. இதில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருக்கிறார்.

“விருமன்” திரைப்படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் “குட்டிப் புலி”, “கொம்பன்”, “மருது”, “தேவராட்டம்”, “கொடி வீரன்”, “புலிக்குத்தி பாண்டி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது திரைப்படங்கள் அனைத்தும் கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போன்ற கதையம்சத்துடன் அமைந்திருக்கும்.

இவர் இயக்கிய “குட்டிப் புலி”, “கொம்பன்” ஆகிய திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆன திரைப்படங்கள். இதில் “கொம்பன்” திரைப்படத்திற்கு பிறகு தற்போது கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் முத்தையா.

“விருமன்” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். செல்வ குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகிய இருவருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ், சிங்கம் புலி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது “விருமன்” திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை எனவும் அதனை திருடித் தான் முத்தையா இயக்கியிருக்கிறார் எனவும் ஒரு உதவி இயக்குனர் புகார் அளித்துள்ளாராம்.

“விருமன்” நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த சர்ச்சை எழுந்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்டவரிடம் தயாரிப்பாளர் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

More in CINEMA

To Top