CINEMA
கோப்ரா படம் பார்க்க லீவ் வேண்டும்.. வைரலாகும் கல்லூரி மாணவரின் கடிதம்
நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள “கோப்ரா” திரைப்படத்தை பார்ப்பதற்காக விடுமுறை வேண்டும் என ஒரு பிரபல கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கல்லூரி முதல்வருக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பல மாத காத்திருப்பிற்கு பின் “கோப்ரா” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரு கல்லூரி மாணவர் “கோப்ரா” திரைப்படத்தை பார்ப்பதற்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த கடிதத்தில் “நாங்கள் செயின்ட் ஜோசஃப் கல்லூரியின் வர்த்தகத் துறை மாணவர்கள். வருகிற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி கோப்ரா திரைப்படத்தை பார்ப்பதற்காக எங்களுக்கு விடுமுறை தேவைப்படுகிறது.
31 ஆம் தேதி எங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆதலால் தான் செப்டம்பர் 1 ஆம் தேதி செல்கிறோம். ஆதலால் எங்களை கல்லூரிக்கு அழைக்க வேண்டாம். நாங்கள் கல்லூரிக்கு வரப்போவதும் இல்லை. நன்றி. இப்படிக்கு சீயான் ரசிகர்கள்” என எழுதியுள்ளார்.
மேலும் இந்த கடிதத்தில் ஒரு குறிப்பையும் எழுதியுள்ளார். அதில் “எங்களிடம் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் எங்களோடு வரலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியா நிறுவனம் சார்பாக எஸ் எஸ் லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிடுகிறார்.