CINEMA
8 வருஷமாச்சு கல்யாணமாகி… வண்டி நல்லா தான் ஓடுது.. நஸ்ரியா வெளியிட்ட சைக்கிள் ரைட் வீடியோ
திருமணமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அது குறித்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நஸ்ரியா.
மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஃபகத் ஃபாசில் தற்போது தமிழ் சினிமாவிலும் கலக்கி வருகிறார். தமிழில் “வேலைக்காரன்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஃபகத் ஃபாசில் அதன் பின் “சூப்பர் டீலக்ஸ்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களை ஆட்கொண்டார்.
தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் “மலையங்குஞ்சு” என்ற திரைப்படம் வெளிவந்தது. அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் “புஷ்பா 2” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். “புஷ்பா” முதல் பாகத்தில் டெரராக வந்து மாஸ் காட்டியிருப்பார் ஃபகத் ஃபாசில். அதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்திலும் தோன்றுகிறார்.
தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நஸ்ரியா நசீம். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக வந்து மக்களின் மனதை கவர்ந்தார். தமிழில் “ராஜா ராணி”, “திருமணம் என்னும் நிக்கா”, “நையாண்டி” என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட “அண்டே சுந்தரநிக்கி” திரைப்படத்தில் கியூட்டாக வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதனிடையே நஸ்ரியா-ஃபகத் ஃபாசில் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் படி தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நஸ்ரியாவும் ஃபகத் ஃபாசிலும் சேர்ந்து சைக்கிள் ரைட் செல்கிறார்கள். மேலும் அந்த வீடியோவில் “எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது” என கூறியுள்ளார்.
View this post on Instagram
