Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

 “கருப்பு சேலையில கலக்கலா இருக்காங்களே”.. கே. ஜி. எஃப். கதாநாயகியின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்..

GALLERY

 “கருப்பு சேலையில கலக்கலா இருக்காங்களே”.. கே. ஜி. எஃப். கதாநாயகியின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்..

கே. ஜி. எஃப். திரைப்படத்தின் கதாநாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் கே. ஜி. எஃப் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது தான் எடுத்த கலர்ஃபுல் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கே. ஜி. எஃப். இத்திரைப்படம் பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கே. ஜி.எஃப். திரைப்படத்தின் இரண்டாம் சேப்டர் வெளிவந்தது. இந்திய அளவில் அசூர வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்டு வருகிறது இத்திரைப்படம். கிட்டத்ததட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வெளியானது. அதிக ஹவுஸ் ஃபுல் ஷோக்களால் பல திரையரங்குகள் திருவிழா ஆனது. தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலும் சக்கை போடு போட்டு கொண்டிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் “கோப்ரா” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் கே. ஜி. எஃப் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது தான் எடுத்த கலர்ஃபுல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

 

 

 

 

“இப்புகைப்படங்களை எனது மொத்த படக்குழுவிற்கும் அஸ்வினுக்கும் ஹசங்கானுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த அழகான ஆடைகளை வடிவமைத்து ரீனா கதாப்பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கிவிட்டீர்கள். ரீனாவை வண்ணமயமாக வெளிகாட்டியதற்கு எனது நன்றிகள். உங்களது செயல் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கும் உங்களது குழுவிற்கு மேலும் பல வெற்றிகள் வந்து சேரட்டும் என நான் விரும்புகிறேன். எனது அளவு கடந்த அன்பை உங்களுக்கு அளிக்கிறேன்” என பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in GALLERY

To Top